சிலர் வேறு உயிரினமாகவோ, மனிதனாகவோ பிறந்தாலும் அவர்களின் ஆன்மா என்பது ஒன்றுதான். உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் வடிவிலோ ஏதாவது உயிரினங்கள் வடிவிலோ கூட உங்களோடு பழகும் தன்மையை பெறுவார்கள், அவர்களால் உதவி ஏற்படும். நீங்கள் செய்யும் தர்ப்பனமானது.
இருள் உலகத்தில் பாவப்பட்டு கிடக்கும் உங்கள் முன்னோர்களின் பாவங்களை சிறிது சிறிதாக கரைத்து அவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க செய்யும். அவர்கள் மறுபிறவி எடுத்தாலும் அவர்களின் உதவி ஏதாவது ஒரு வகையில் வந்து சேர செய்யும்.
உதாரணமாக நேற்று நீங்கள் பழகிய நண்பர் பல நாள் பழகியது போல நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் பல லட்சம் கூட உதவி செய்யலாம். அவ்வாறு உதவி செய்பவர் உங்களில் முன்னோர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.
நீங்கள் செய்யும் தர்ப்பணம் முன்னோர்களுக்கு மட்டுமே என்று அது எந்த வகையிலும் வீண்போகாது என்று உணர்ந்து செயல்படுங்கள்.
தர்ப்பணத்தின் பலனாகத்தான் மறுபிறவியே அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment